ஐ.சி.எஸ்.இ பள்ளிகள் சங்கத்தின் மாநில மாநாடு ...

வெள்ளி, 1 நவம்பர் 2019 (21:26 IST)
தமிழக நர்சரி, பிரைமரி, மெட்ரிக், உயர்நிலை, மேல்நிலை, சி.பி.எஸ்.இ மற்றும் ஐ.சி.எஸ்.இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் கரூரில் நாளை (02-11-19) நடக்கின்றது.

கரூர் அருகே காந்திகிராமம் பகுதியில் உள்ள மேக்மில்லன் தனியார் பள்ளியில் நாளை தமிழக நர்சரி பிரைமரி மெட்ரிக், உயர்நிலை, மேல்நிலை, சி.பி.எஸ்.இ மற்றும் ஐ.சி.எஸ்.இ பள்ளிகள் சங்கத்தின் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த நிறுவனர் மற்றும் மாநில பொருளாளர் ரமேஷ்பாபு தலைமையில் நடைபெற உள்ள மாநாட்டில், மாநில தலைவர் ராஜூ, மாநில செயலாளர் முகமது பசூல் உல்கக் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிலையில், மாநில பொருளாளர் ரமேஸ் பாபு  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நாளை காலை எங்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாகவும், இதில் பல்வேறு முடிவுகள் எடுக்க உள்ளதாகவும், குறிப்பாக 5 மற்றும் 8 ம் வகுப்புகளுக்கு கட்டாய பொதுத்தேர்வினை ரத்து செய்ய வேண்டுமென்றும், தொடர்ந்து தொடர்ச்சியாக இயங்கும் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கிகாரம் வழங்க வேண்டுமென்றும், ஆண்டுதோறும் புதுப்பிக்கும் முறைக்கு பதில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கும் வகையை கொண்டு வர அரசுக்கு கோரிக்கை வைப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்