மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய இரண்டு தொகுதியிலும் வாக்காளர்களுக்கு பணமும், பரிசுப் பொருட்களும் விநியோகிக்கப்படுவதாக வந்த புகாரின் பேரில் அங்கு தேர்தல் மட்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அங்கு 23ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும், 25ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மொத்தம் 5 கோடியே 82 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்து தங்களது பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க உள்ளனர். வாக்களிப்பதற்காக மாநிலம் முழுவதும் மொத்தம் 66 ஆயிரத்து 7 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 234 தொகுதிகளில் 3,454 ஆண் வேட்பாளர்கள், 320 பெண் வேட்பாளர்கள், திருநங்கைகள் 2 பேர் என மொத்தம் 3,776 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.