ஆனால் இது அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டம் இல்லை எனவே ஸ்டாலினின் ஆதரவு தங்களுக்கு தேவையில்லை என அவரை மாணவர்கள் திருப்பி அனுப்பினர். இது மக்கள் போராட்டம், அரசியல்வாதிகள் போராட்டத்தில் பங்குபெற வேண்டாம் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், மாணவர்கள் போராட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவிக்கவே வந்தேன். தை மாதம் முடிவதற்குள்ளாவது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுகொண்டு அந்த இடத்தை விட்டு சென்றார்.