இந்திய அளவில் கொரோனா பாதிப்பு மொத்தமாக 23,073 ஆக உள்ளது. 4,749 பேர் குணமடைந்துள்ள நிலையில் 718 பேர் உயிரிழந்துள்ளனர்.
த;லைநகர் டெல்லியில் 2,376 பேரும், குஜராத்தில் 2,624 பேரும், ராஜஸ்தானில் 1,734 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,659 ஆக உள்ளது. தமிழகம் 1,683 பாதிப்பு எண்ணிக்கையுடன் ஆறாவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், வரும் மே 3 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில். சற்றுமுன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை, கோவை, மதுரை மாவட்டங்களில் வரும் ஏப்ரல் 26 காலை 6 மணி முதல் ஏப்ரல் 29 இரவு வரையும், சேலம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் வரும் ஏப்ரல் 26 காலை 6 மணி முதல் ஏப்ரல் 28 இரவு வரைமுழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.
இதையடுத்து, தமிழக முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம். பிற தனியார் நிறுவனங்கள் செயல்படாது என பதிவிட்டுள்ளார்.