காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலை நகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் தங்கி பயின்று வந்த திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி அனுப்பிரியா என்ற மாணவி கடந்த மே 25ஆம் தேதி அன்று பத்தாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். அதேபோல் ஜார்கண்ட் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வன் சவுத்ரி என்ற 19 வயது கல்லூரி மாணவர் கடந்த் மே27ஆம் தேதி விடுதியின் பின்புறம் இறந்து கிடந்தார். மேலும் ஜூலை 15ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த தர்ஷன் என்பவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.