தமிழகம் தேவையற்ற தொல்லை தருகிறது: கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றாச்சாட்டு..!

செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (10:12 IST)
தமிழகம் தேவையற்ற தொல்லை தருகிறது என கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்
 
தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு இடையே  மேகதாது பிரச்சனை தற்போது உச்சக்கட்டத்தில் இருந்து வரும் நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்தபோது சித்தராமையா தமிழகம் குறித்து குற்றம் சாட்டியுள்ளார்.
 
 அதில் மேகதாது விவகாரத்தில் தேவையற்ற தொல்லைகளை தமிழகம் தருகிறது என்று சித்தராமையா தெரிவித்தார். மேகதாது திட்டத்தை எதிர்ப்பதற்கு தமிழகத்திற்கு எந்த காரணமும் இல்லை என்றும் எங்கள் பகுதியில் நாங்கள் அணை கட்டுகிறோம் ஆனால் மத்திய அரசு தாமதம் செய்கிறது என்றும் அவர் தெரிவித்தார். 
 
தமிழகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சித்தராமையாவுக்கு தமிழக அரசு எப்படி பதிலடி தரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்