இதுகுறித்து கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் செங்கோட்டையன் “ எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துவிடுவோம் என மிரட்டுவதெல்லாம் சும்மா. அவர்கள் அப்படியெல்லாம் ராஜினாமா செய்ய மாட்டார்கள். தன்னுடைய கோரிக்கை நிறைவேறவில்லை என்பதற்காக வாழப்பாடி ராமமூர்த்தி தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பின் யாரும் அப்படி ராஜினாமா செய்ததில்லை” என கருத்து தெரிவித்தார்.