சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்திற்கு பாட்டெழுத நான் , நீ என்று போட்டி போடும் கவிஞர்கள் இருக்கும் நிலையில் வைரமுத்து பாட்டெழுதியதால் தான் ரஜினிக்கு புகழ் கிடைத்தது என்ற முட்டாள்தனமான கருத்தை சீமான் தெரிவித்துள்ளதாக கோலிவுட்டில் கூறப்படுகிறது
வைரமுத்து ரஜினியை நண்பரா பார்க்கிறார். ஆனால் வைரமுத்துவை ரஜினி எப்படி பார்க்கிறார் என்பது இப்பொழுது தெரிகிறது. வைரமுத்துவின் தமிழால் வளர்ந்தவர்கள், இந்த நேரத்தில் அவருக்காக நிற்க வேண்டும். சில தரப்பினரின் நன்மதிப்பு போய்விடும், வாக்கு வங்கி பாதிக்கப்படும் என்று அமைதி காக்கிறார்கள். அப்படி நின்றால் குறிப்பிட்ட சாரார் நன்மதிப்பும் வாக்கும் போய்விடும் என நினைக்கிறார் ரஜினிகாந்த். அப்படி இருக்கக் கூடாது; தர்மத்தின் பக்கமும் சத்தியத்தின் பக்கமும் ரஜினிகாந்த் நிற்க வேண்டும்.
ரஜினிகாந்த் பாடிய நான் குடிச்சது தமிழ்ப் பால், உப்பிட்ட தமிழ் மண்ணை மறக்கமாட்டேன் பாடல்கள் எல்லாமே வைரமுத்து எழுதியதுதான். வைரமுத்து போட்ட பிச்சை அது. அதில்தான் இவர்கள் தங்களை உயர்ந்த நடிகர்களாக அடையாளம் காட்டிக் கொள்கிறார்கள். இன்று வைரமுத்துவுக்கு ஒரு பிரச்சனை என்கிற உடன் வந்து நிற்க வேண்டும்' என்று சீமான் கூறியுள்ளார்.