ஆதிக்கேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்! – பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
செவ்வாய், 5 ஜூலை 2022 (12:24 IST)
கன்னியாக்குமரி ஆதிக்கேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாக்குமரி மாவட்டம் திருவட்டாறில் உள்ள பிரபல ஆதிக்கேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது. இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகை தருவார்கள் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் கும்பாபிஷேகத்தையொட்டி கன்னியாக்குமரியில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.