மேலும், அவரே முதல்வராக வேண்டும் என தற்போதைய தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முன்மொழிந்தார். மேலும், தனது ராஜினாமா கடிதத்தையும் அவர் ஆளுநருக்கு அனுப்பியுள்ளார். வருகிற 9ம் தேதி தமிழகத்தின் முதல்வராக சசிகலா பதவியேற்பார் எனக்கூறப்பட்டது. ஆனால் ஆளுநர் வித்யாசகர் ராவ் தற்போது மும்பையில் உள்ளார். மேலும் அவர் தமிழகம் எப்போது வருவார் என்ற தகவலும் இல்லாததால் சசிகலா பதவியேற்பு தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பிவரும் நிலையில் போயஸ்கார்டனில் சசிகலா தற்போது அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்ட கட்சியின் மூத்த உறுப்பினர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.