டிக்கெட் எப்படி எடுக்க வேண்டும்? மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட முக்கிய் அறிவிப்பு!
வியாழன், 3 செப்டம்பர் 2020 (12:45 IST)
தமிழகத்தில் மெட்ரோ ரயில் பயணத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
மத்திய அரசு மெட்ரோ ரயில்கள் இயக்கப்டலாம் என அறிவித்த நிலையில் சென்னையில் வரும் 7 ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் இயங்கும் என தமிழக அரசு அறிவித்தது. தற்போது மெட்ரோ ரயிலுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவை,
1. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
2. அலுவலக நேரமான காலை 8.30 - 10.30 மற்றும் மாலை 5.00 - 8.000 மணி வரை 5 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
3. அலுவலக நேரத்தை தவிர்த்து 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
4. ஸ்மார்ட் காஎடு மற்றும் QR ஸ்கேன் முறையில் மெட்ரோ ரயில் பயண டிக்கெட் வழங்கப்படும்.
5. ரயில் இருக்கைகளில் ஒரு இருக்கை இடைவெளி விட்டு பயணிகள் அமர வேண்டும்.