மாற்றி அமைக்கப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ளது. தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த சட்டங்களை எதிர்த்து மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், செந்தில்குமார் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறாது.
முன்னதாக மத்திய அரசு பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷிய அதினியம் என்ற பெயரில் 3 புதிய சட்டங்கள் ஜூலை 1 முதல் அமல்படுத்தியது. இந்த புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.