விவசாயி வீட்டுக்கு ரூ.1 லட்சம் கரண்ட் பில்லா? பணத்தை செலுத்த சொல்லி அதிகாரிகள் எச்சரிக்கை! - கிராம மக்கள் அதிர்ச்சி!

Prasanth Karthick

வெள்ளி, 24 ஜனவரி 2025 (11:08 IST)

கொடைக்கானலில் உள்ள கிராமம் ஒன்றில் வாழும் மக்களுக்கு அதிகமான கரண்ட் பில் வந்துள்ள நிலையில் அதை கட்டியே ஆக வேண்டும் என அதிகாரிகள் கூறுவதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.


 

கொடைக்கானல் பகுதியில் உள்ள கீழ்மலை கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. அங்குள்ள வீடுகளுக்கும், விவசாய பகுதிகளுக்கும் மின் வசதி உள்ள நிலையில் சமீபமாக ரீடிங் மீட்டரில் அதிக யூனிட் காட்டப்படுவதாக அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்துள்ளனர்.

 

சமீபத்தில் கே.சி.பட்டியை சேர்ந்த விவசாயி இளையராஜாவின் மீட்டரில் 8976 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டதாக காட்டப்பட்ட நிலையில் அவருக்கு ரூ.1 லட்சத்து ஆயிரத்து மூந்நூற்றி முப்பத்து மூன்று ரூபாய் மின் கட்டணமாக செலுத்த வேண்டும் என மின்வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

அந்த கிராமத்தில் ஒரே ஒரு குண்டு பல்பு உள்ள வீட்டிற்கு கூட மின் கட்டணம் ஆயிரம் ரூபாய்க்கு மேல் வருவதால் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இதுகுறித்து மின்வாரியத்தில் புகார் அளித்தபோதும் அவர்கள் நிர்ணயிக்கப்பட்ட தொகையை செலுத்தியே ஆக வேண்டும், இல்லாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

 

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சினையில் தலையிட வேண்டும் என்றும், மின்வாரியம் பிரச்சினையை கண்டறிந்து சரி செய்வதுடன் விதிக்கப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்