நேற்று தமிழகத்தில் 3,943 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 90,167 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 3,943 பேர்களில் 2,393 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 58,327 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், சென்னை ராயபுரம் மண்டலத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு 8,000-ஐ தாண்டியுள்ளது. அதோடு கோடம்பாக்கத்தில் 6,173 ஆகவும், திரு.வி.நகரில் 4,833 ஆகவும், வளசரவாக்கதில் 2,724 ஆகவும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உள்ளது திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.