உலகில் மிகப்பெரிய ஜனநாயகத் தேர்தல் இந்தியாவில் கடந்த ஏப்ரல் 11ல் தொடங்கி, மே 19ல் முடிவடைந்தது. இதன் மக்கள் தீர்ப்பு என்னும் வாக்கு எண்ணிக்கை கடந்த 23 ஆம்தேதி நடைபெற்றது. அதில் இந்தியாவில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் 303 தொகுதியிலும், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் 352 இடங்களில் வென்றாலும் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட பாஜக வெற்றி பெறவில்லை. 37 தொகுதியில் திமுக கூட்டணியும், 1 தொகுதியில் அதிமுகவும் வென்றது.
மேலும் தமிழாட்டுக்கு மத்திரி சபையில் பிரதிநிதித்துவம் தராமல் செய்துவிட்டதாகவும், இதனால் தமிழகத்துக்கு மத்திய அரசின் திடங்களை கொண்டுவருவதில் சிக்கல் ஏற்படும் சிக்கல் ஏற்படும் என்று பலரும் கூறிவருகின்றனர்