அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத் தயார்: ஆர்.பி.உதயகுமார் அதிரடி

ஞாயிறு, 23 ஆகஸ்ட் 2020 (12:18 IST)
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளிலும் உள்கட்சி பூசல் வளர்ந்து வருவதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். குறிப்பாக அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார்? என ஒரு சில அமைச்சர்கள் பிரச்சனையை எழுப்பியதும் அதன் பின்னர் தமிழகத்தின் இரண்டாவது தலைநகரம் குறித்து ஒரு சில அமைச்சர்கள் பிரச்சினைகளை எழுப்பியதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் மதுரையை இரண்டாவது தலைநகரமாக வேண்டுமென அமைச்சர் ஆர்வி உதயகுமார் அவர்கள் அழுத்தம் திருத்தமாக கூறி வந்தார் என்பது தெரிந்ததே. அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்களுக்கு ஆர்பி உதயகுமாரின் கருத்துக்கு ஆதரவு அளித்தார்.
 
இந்த நிலையில் சற்று முன் திடீரென ’தென் தமிழகத்தின் வளர்ச்சிக்காக அமைச்சர் பதவியை கூட ராஜினாமா செய்ய தயார் என்று அமைச்சர் ஆபி உதயகுமார் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி எனக்கு பதவி முக்கியமல்ல தென் தமிழகத்தின் வளர்ச்சி தான் முக்கியம் என அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை திடீரென அவர் எதற்காக கூறி வருகிறார் என்பது குறித்து சக அமைச்சர்கள் மற்றும் தமிழக மக்கள் குழப்பத்தில் உள்ளனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்