மத்திய அமைச்சராகிறாரா ரவீந்திரநாத்? டெல்லியில் இருந்து வந்த அழைப்பு...

வியாழன், 30 மே 2019 (13:08 IST)
ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்திற்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்தியாவின் 17 வது மக்களவைத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரமராக இன்று பதவியேற்கிறார். இந்த விழாவில் பங்கேற்க  வெளிநாட்டு தலைவர்கள், மாநில தலைவர்கள் பலர் அழைக்கப்பட்டுள்ளனர். 
 
இந்நிலையில், மத்திய அமைச்சரவையில் இடம்பெற உள்ள எம்.பிக்கள் இன்று மாலை 4.30 மணிக்கு மோடியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த தகவல் வெளியான சிறிது நேரத்தில் தேனி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற ஓபிஎஸ் மகன் ரவீந்திரராத்திற்கும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 
 
எனவே, பாஜக அமைச்சரவையில் அதிமுக சார்பில் மத்திய அமைச்சராக ரவீந்திரநாத் இருக்க கூடும் என இந்த தகவல் தெரிவிக்கின்றன. ஆனால், ரவீந்திரநாத் மத்திய அமைச்சராவதில் எடப்பாடி பழனிச்ச்சாமிக்கு உடன்பாடு இல்லை என்பது ஏற்கனவே தெரிந்ததே. மூத்த தலைவர் வைத்தியலிங்கம் மத்திய அமைச்சராவார் என்றே எதிர்பார்ப்புகள் இருந்தது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்