அதனை தொடர்ந்து டொமினிக்,ராமசாமி என்ற இருவர் மட்டுமே விசாரணைக்கு வந்துள்ளனர்.
பின்னர் விசாரணை மேற்கொண்ட போது பெட்டியை சோதனை செய்ததில் சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட வெளிநாட்டு உயிரினங்களான ஆமை குஞ்சுகள், சிலந்தி வகைகள், அரியவகை பாம்புகள் இருப்பது தெரியவந்தது.
உடனடியாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கும் வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டு, அங்கு வந்த அதிகாரிகள் அவற்றை கைப்பற்றினர். கைப்பற்றப்பட்டவை அரியவகை வெளிநாட்டு விலங்குகள் என்பதால் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.