இந்த நிலையில் ரஜினியின் அரசியல் கட்சியில் பல முன்னணி பிரபலங்கள் மற்றும் பல்வேறு கட்சியில் உள்ள அரசியல் தலைவர்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கிடைத்த செய்தியின்படி ரஜினியின் புதிய அரசியல் கட்சியில் கலைபுலி எஸ் தாணு மற்றும் ரங்கராஜ் பாண்டே ஆகிய இருவரும் இணைய இருப்பதாகவும் இவர்கள் இருவருக்கும் ரஜினி கட்சியிலிருந்து போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. ரஜினி கட்சியில் இப்போதைக்கு இருவரும் இணைவது உறுதியாகியுள்ளது நிலையில் இன்னும் யாரெல்லாம் அக்கட்சியில் இணைகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்