சுவாதி, ராம்குமார் இந்த இரு பெயர்களும் தற்போது ஊடகங்களில் வலம் வரும் முக்கியமான பெயராகவிட்டது. நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம் பெண் சுவாதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இவரை நெல்லையை சேர்ந்த ராம்குமார் தான் கொலை செய்தார் என காவல் துறையினர் கைது செய்தனர்.
இதனையடுத்து ராம்குமார் குறித்து தினம் தினம் பல தகவல்கள் வெளிவந்தவாறு உள்ளன. ராம்குமார் அமைதியான பையன், யாரிடமும் அதிகமாக பேசமாட்டான், பெரிய அளவில் நண்பர்கள் வட்டாரம் கிடையாது, ராம்குமாரா கொலையை செய்தான் என நம்ப முடியவில்லை என்ற ஊர்காரர்களின் கருத்து என பல செய்திகள் ஊடகங்களில் வெளிவருகின்றன.
ராம்குமார் கல்லூரியில் படிக்கும் போது கேரளாவை சேர்ந்த ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்ததாகவும், இதனால் கல்லூரி நிர்வாகம் அவரை எச்சரித்ததாக கூறப்பட்டது. இதனால் தான் அவர் படிப்பில் கோட்டைவிட்டதாக பேசப்படுகிறது.