சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் விரைந்து உடல் நலம் பெற வேண்டி வாழ்த்துவதாக தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
மேலும், மருத்துவர்கள் குழு கூறியதாவது, அவருக்கு ரத்த நாளங்களில் அடைப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய பரிசோதனை செய்யப்பட உள்ளதாகவும், தேவைப்பட்டால் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அனைத்து பரிசோதனைகளும் முடிந்து இன்று அவருக்கு வீடுதிரும்ப வாய்ப்பு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் சூப்பர் ஸ்டார் திரு ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற வேண்டும் என தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், ரஜினிகாந்த் உடல் நலம் பெற வேண்டும் என பல அரசியல்வாதிகள் மற்றும் திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.