கர்நாடக மாநிலத்தில் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படத்திற்கு அம்மாநில திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ள நிலையில் அந்த மாநிலத்தில் 'காலா' வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், 'காலா' படத்தை வெளியிடுவது குறித்த பிரச்சனையில் அரசு தலையிடாது என்றும் கன்னட மக்கள் 'காலா' படம் திரையிடுவதை விரும்பவில்லை என்றும் கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறிவிட்டார்.
கர்நாடகாவில் காலா" படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் உள்ளிட்டோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ரஜினிகாந்த் “ காலா திரைப்படம் கர்நாடகாவில் ரிலீஸ் ஆகும். இப்படத்திற்கு எதிர்ப்பு வரும் என நான் எதிர்பார்த்தேன். ஆனால், நான் எதிர்பார்த்ததை விட எதிர்ப்பு குறைவாகவே இருக்கிறது. காலா ரிலீஸ் செய்வதில் ஐயா தேவகவுடா உதவியாக இருப்பார் என நம்புகிறேன். சினிமா வேறு. அரசியல் வேறு. இது பலருக்கும் புரியவில்லை”என அவர் பேட்டியளித்தார்.