தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இரண்டு மகள் உள்ளனர். ஐஸ்வர்யா முதல் மகள், சௌந்தர்யா இரண்டாவது மகள். முதல் மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை திருமணம் செய்துகொண்டார். இரண்டாவது மகள் சௌந்தர்யா தொழிலதிபர் அஸ்வின் ராம்குமாரை கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
2010-இல் அஸ்வின் ராம்குமாரை திருமணம் செய்துகொண்ட சௌந்தர்யா, கடந்த நான்கு மாதங்களாக சென்னை சேத்துப்பட்டில் தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. இவர் தற்போது விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்றுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.