இந்த விவகாரத்தை குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் கிண்டல் செய்த திமுகவினர் சிலர் ரஜினி சிஸ்டத்தை சரி செய்வேன் என சொல்கிறார். ஆனால் வரி கட்டவோ, வாடகை கட்டவோ மாட்டேன்கிறார் என கிண்டல் செய்துள்ளனர். இதனால் தங்கள் பங்குக்கு களம் இறங்கிய ரஜினி ரசிகர்கள், தொண்டர்கள், வாடகை பாக்கியில்லை என லதா ரஜினிகாந்த் அளித்த விளக்கத்தை மேற்கோள் காட்டி #வாடகைஇங்கே_மூலபத்திரம்எங்கே என்ற ஹேஷ்டேகை வேகமாக ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதனால் சமூக வலைதளங்களில் திமுக – ரஜினி தொண்டர்கள் இடையே கருத்து மோதல் எழுந்துள்ளது.