கலப்படம் இருக்கு..ஆனா இல்லை...குழப்பும் ராஜேந்திர பாலாஜி

புதன், 28 ஜூன் 2017 (16:15 IST)
தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும் எல்லா பால்களிலும் கலப்படம் இருப்பதாக நான் தெரிவிக்கவில்லை என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.


 

 
சமீபத்தில் தனியார் நிறுவங்கள் தயாரிக்கும் பாலில் கலப்படம் இருக்கிறது என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறி பொதுமக்களிடம் பீதியை கிளப்பினார். ஆனால், அவரின் குற்றச்சாட்டை சில தனியார் நிறுவனங்கள் மறுத்தன.
 
ஆனால், தனியார் பாலில் கலப்படம் இருப்பது ஆய்வில் நிரூபணம் ஆகியுள்ளது எனவும், இதனால் அதை அருந்தும் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், சில தனியார் நிறுவனங்களின் பாலை காண்பித்து, இதில் கலப்படம் இருப்பது நிரூபணம் ஆகியுள்ளது. இதில் காஸ்டிக்சோடா மற்றும் பிளிச்சிங் பவுடர் ஆகியவை கலக்கப்பட்டுள்ளது. இதை குழந்தைகளுக்கு கொடுத்தால், அவர்களுக்கு வயிற்றுப்போக்கு, காலரா உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் என பரபரப்பு கிளப்பினார்.
 
இந்த செய்தி பெண்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இன்று மீண்டும் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திரபாலாஜி “தனியார் பால் அனைத்திலும் கலப்படம் இருப்பதாக நான் கூறவில்லை. சில நிறுவனங்கள் தயாரிக்கும் பாலில் மட்டுமே கலப்படம் இருக்கிறது. இந்த குற்றச்சாட்டை பால் முகவர்கள் சங்கத்தில் ஒருவர் மட்டுமே எதிர்க்கிறார். அதே சங்கத்தை சேர்ந்த மற்றவர்கள் எதிர்க்கவில்லை” என அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்