ஆனால் 9.40 ஆகியும் கிரண்பேடி வரவில்லை. எனவே, கிரண்பேடி இல்லாமல் சபாநாயகர் சிவக்கொழுந்து சட்டமன்ற நிகழ்வுகளை துவங்கினார். இருப்பினும் பட்ஜெட் தாக்கல் நண்பகல் 12 மணிக்கு கிரண்பேடி வருகைக்காக ஒத்திவைக்கப்பட்டது.
அப்போதும் அவர் வரவில்லை. எனவே, புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் நாராயணசாமி. பட்ஜெட்டிற்கு கிரண்பேடி ஒப்புதல்வழங்காத நிலையில் அவரது எதிர்ப்பை மீறி புதுச்சேரி சட்டப்பேரவையில் 20-21-க்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.