பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு.. சேலம் மாணவி முதலிடம்..!

Mahendran

புதன், 10 ஜூலை 2024 (11:04 IST)
பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகியுள்ள நிலையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு மதிப்பெண் பட்டியலில் சேலம் மாணவி ராவணி முதலிடம் பெற்றுள்ளார். மேலும்  கோவை மாணவி கிருஷ்ணா அனூப் இரண்டாம் இடமும், வேலூரைச் சேர்ந்த மாணவர் சரவணன் மூன்றாம் இடமும் பிடித்தனர்.

பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் சற்றுமுன் வெளியாகியுள்ள  நிலையில் இந்த பட்டியலை tneaonline.org என்ற இணையதளத்தில் பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2024-25 ஆம் கல்வி ஆண்டுக்கான பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பம் செய்த நிலையில் இன்று காலை தரவரிசை பட்டியல் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

விண்ணப்ப கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு ரேண்டம் எண் கடந்த மாதம் 12ஆம் தேதியே அனுப்பப்பட்ட நிலையில் சான்றிதழ் சரிபார்க்கும் பணியும் தற்போது முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் இன்று தரவரிசை பட்டியலை தொழில்நுட்ப கல்வி இயக்குனர் இயக்க ஆணையர் வீரராகவராவ் அவர்கள் வெளியிட்டார்.

மேலும் வரும் 22ஆம் தேதி பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்