அதிகாலை நடந்த சேஸ்... கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி!
திங்கள், 14 ஜூன் 2021 (10:01 IST)
சென்னை ஆர்கேநகர் வைத்தியநாதன் மேம்பாலம் அடியில் இன்று காலை 4 மணிக்கு காக்கா தோப்பு பாலாஜி H6 காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
இன்று காலை 4 மணி அளவில் வைத்தியநாதன் மேம்பாலம் அடியில் ஆயில் பைப்லைன் அருகில் இரண்டு பேர் ஒரு மூட்டையை வைத்துக் கொண்டு இருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் வந்தது வந்தவுடனே காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர்
காவல்துறையை பார்த்தவுடன் இருவரும் ஓட்டம் பிடித்தனர் காவலர்கள் அவர்களை விரட்டி பிடிக்கும் போது பிரபல வடசென்னை ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்று காவல்துறைக்கு தெரியவந்தது.
காக்கா தோப்பு பாலாஜி விரட்டி பிடிக்கும் போது கீழே விழுந்து வலது கால் வலது கை சிறிது காயம் ஏற்பட்டது அவர் கையிலிருந்து 24 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டனர் அதைத் தொடர்ந்து காக்கா தோப்பு பாலாஜி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு காவல்துறையினர் சேர்க்கப்பட்டது.
பிரபல ரவுடியான காக்கா தோப்பு பாலாஜி அவர் மேல் கொலை ,கொள்ளை ,ஆள் கடத்தல் ,கட்ட பஞ்சாயத்து, பல்வேறு வழக்குகள் நிலவில் உள்ளன இது தொடர்ந்து இன்று H6 காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.