இந்த நிலையில் சமீபத்தில் கைதான வழக்கறிஞர் ஹரிஹரன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ரவுடி சம்போ செந்திலுக்கு தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் நொய்டா அருகே ரவுடி சம்போ செந்தில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து தனிப்படை போலீசார் உத்தரபிரதேசம் சென்றுள்ளதாகவும், அவர்கள் சம்போ செந்திலை நெருங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.