பிரதமர் மோடி வருகை எதிரொலி: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்..!

வெள்ளி, 7 ஏப்ரல் 2023 (17:40 IST)
பிரதமர் மோடி நாளை தமிழகம் வர இருப்பதை அடுத்து சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி நாளை சென்னை வர இருப்பதால் சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
 
சென்னை விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக பிரதமர் செல்லும் வழி மற்றும் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் விழாக்கள் சுற்றியுள்ள பகுதிகளில் மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
 
இது குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஐஎன்எஸ் அடையார் முதல் சென்னை சென்ட்ரல் வரை மற்றும் சென்னை சென்ட்ரல் முதல் விவேகானந்தா இல்லம் வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது 
 
சென்ட்ரல் ரயில் நிலையம் வழியாக செல்லும் வாகனங்கள் அண்ணா ஆர்ச் முதல் தீவு திடல் அருகே உள்ள முத்துசாமி சந்திப்பு வரை அனுமதிக்க படாது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்ட்ரல் நோக்கி வரும் வாகனங்கள், அண்ணாநகர் நோக்கி திருப்பி விடப்படும். 
 
அதேபோல் எழும்பூரில் இருந்து செல்லும் வாகனங்கள், காந்தி இர்வின் பாலம் வழியாக ஈ.வெ.ரா சாலையில் இடதுபுறம் திருப்பிவிடப்படும். ஸ்டான்லி, மின்ட் சந்திப்பு, மூலக்கொத்தளம் சந்திப்பு, பேசின் பிரிட்ஜ் பகுதிகளிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்