பெரியார் சிலையை அவமதிப்பது தமிழகத்தில் அவ்வப்போது நடந்து வருகிறது. அந்த வகையில் கோவையில் வெள்ளலூர் பகுதியில் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து, காவி பொடி தூவி விடப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து உடனடியாக போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். கொரோனா பொதுமுடக்கம் காரணமாக இன்று ழுழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.