புதுச்சேரி மாநிலத்தில் தனிநபர் வருமானம் கடந்த ஆண்டைவிட 7.61 சதவிகிதம் உயர்ந்துள்ளது - ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் !

J.Durai

புதன், 31 ஜூலை 2024 (15:16 IST)
புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்கியது ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் புதுச்சேரி பொறுப்பு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேரவையில் உரை நிகழ்த்தினார். முன்னதாக பட்டு வேஷ்டி சட்டையுடன் பேரவைக்கு வந்த சி.பி.ராதாகிருஷ்ணனை சபாநாயகர் செல்வம் வரவேற்று பேரவை மண்டபத்திற்குள் அழைத்து சென்றார்.
 
பேரவையில் ஆளுநர் ராதாகிருஷ்ணன் பேசத் தொடங்கியபோது மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரிக்கு எந்தவித நிதியும் ஒதுக்கவில்லை எனவும் புதுச்சேரி அரசின் செயல்பாடுகளை திமுக காங்கிரஸ் உறுப்பினர்கள் விமர்சிக்கத்தொடங்கினார்கள். தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். அரசு தரப்பில் திருத்தி கொள்ளட்டும். முதலில் எனது உரையை கேளுங்கள். தயவு செய்து அமருங்கள். இது எனது முதல் உரை. வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட்டதால் இது கடைசி உரை என  என்று குறிப்பிட்டு பேசத்தொடங்கினார் ராதாகிருஷ்ணன். இதனைத்தொடர்ந்து எதிர்கட்சிகள் அமர்ந்து ஆளுநரின் பேச்சை கேட்டுவந்தனர்.
 
தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் புதுச்சேரியில் கடந்த ஆண்டின் மொத்த ஒதுக்கீடான ரூ.12.25 கோடியில் 93.58 விழுக்காடு செலவு செய்துள்ளதாகவும், புதுச்சேரி மாநிலத்தில் தனிநபர் வருமானம் ரூ.2.63 லட்சமாக உயர்ந்துள்ளதாகவும் இது கடந்த ஆண்டை விட 7.61 விழுக்காடு வளர்ச்சியை அடைந்துள்ளதாக குறிப்பிட்ட ஆளுநர்.
 
விவசாயிகளுக்கு உற்பத்தி மானியமாக ரூ.7.85 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இலவச அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் 3.37 லட்சம் குடும்பத்தினருக்கு ரூ.219 கோடி செலவு செய்துள்ளதாகவும், முதலமைச்சரின் எரிவாயும் மானியத்திட்டத்திற்காக ரூ.21.50 செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், புதுச்சேரியில் உபரி மின்சாரத்தை விற்பனை செய்யப்பட்டதில் ரூ.261.20 கோடி வருவாய் கிடைத்ததாக மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ராதாகிருஷ்ணன்.
 
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைகழக வளாகம் கட்ட ரூ.8 கோடி ஒதுக்கியுள்ளதாகவும்,வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பத்தலைவிகளுக்கு மாதாந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்காக ரூ.36.32 கோடி வழங்கப்பட்டு இருப்பதாகவும், பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வைப்பு நிதி வைப்புத்திட்டத்திற்காக, 2,100 பெண்குழந்தைகளுக்கு ரூ.10.50 கோடி செலவு செய்துள்ளதாகவும் ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்ட முக்கிய அம்சங்களாகும்.
 
புதுச்சேரி பேரவையில் முந்தைய ஆளுநராக இருந்த தமிழிசை செளந்தரராஜனுக்கு பிறகு இன்று சி.பி.ராதாகிருஷ்ணன் 75 நிமிடங்கள் தமிழில் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளுநர் உரையாற்றிக்கொண்டிருக்கும்போது   திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எழுந்து நின்று, " எதுவுமே நிறைவேற்றாமல் நிறைவேற்றியதாக படிக்கிறீர்கள்" என்று சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினர். ஆளுநர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். இதையடுத்து ஆளுநர் உரையை கண்டித்து திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
 
சட்டப்பேரவை கூட்டம் தொடங்கும் முன்பு சட்டசபை மைய மண்டபத்தையொட்டியுள்ள, சபாநாயகர் அறையில் கணபதி ஹோமம் செய்யப்பட்டது. பின்னர் புனித கலசங்களில்  வைக்கப்பட்டிருந்த நீரை சட்டசபை மைய மண்டபத்தில் பல்வேறி இடங்களிலும் தெளிக்கப்பட்டது அப்போது பேரவைக்குள் நுழைந்த திமுக உள்ளிட்ட எதிர்கடை எம்.எல்.ஏக்கள் புதிய முயற்சி நன்றாக இருக்கிறது, ஆனால் ஆர்.எஸ். எஸ் அலுவலகமாக மாற்றி விடாதீர்கள் என கிண்டலடித்தனர்.
 
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் செல்வம் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டம் 11 நாட்கள்  நடைபெறும் என்றும் வரும் 14ந்தேதியோடு கூட்டம் நிறைவு பெறுவதாகவும் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்