சமீபத்தில் பாடகி சுசித்ராவின் டிவிட்டர் பக்கத்தில் தனுஷ், ஹன்சிகா, த்ரிஷா, சூதுகவ்வும் கதாநாயகி சஞ்சிதா ரெட்டி ஆகியோரின் புகைப்படங்கள் வெளியாகி தமிழ் சினிமா உலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், பாடகி சின்மனி, அனிருத், ஆண்டிரியா, பார்வதி நாயர், அமலாபால் ஆகியோரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகும் என அந்த டிவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. இதில், சஞ்சிதா ரெட்டி மட்டும் அந்த வீடீயோவில் இருப்பது நான் இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகை பார்வதி நாயர் “ ஒருவரின் பெயரை பொதுவெளியில் இழிபடுத்துவது கிரிமினல் குற்றமாகும். இதை நிறுத்துவார்கள் என நம்புகிறேன். என் மனசாட்சி படி நான் சுத்தமாகவே இருக்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார். இவர் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ என்ற படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.