சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் ஒரே நேரத்தில் அரசியல் களத்தில் இறங்கியுள்ளது அதிமுக, திமுக உள்பட முன்னணி கட்சிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத அரசியல் களத்தில் இவர்கள் இருவரின் செல்வாக்கு எப்படி இருக்கின்றது என்பது வரும் தேர்தலில்தான் தெரியவரும்
இந்த நிலையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஓராண்டு சாதனை விழாவில் பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ், ரஜினி-கமலை மறைமுகமாக தாக்கி பேசினார். அவர் பேசியதாவது: அரசியலுக்கு புதிது புதிதாக ஒருசிலர் வந்து கொண்டிருக்கிறார்கள். மக்களை பற்றி சிந்திக்காதவர்கள் சிஸ்டத்தை பற்றி சிந்திக்கிறார்கள். சிலர் கருத்து கந்தசாமியாக இருக்கிறார்கள். அரசியல் பற்றி தெரியாதவர்களுக்கு பூஜ்ஜியம்தான் கிடைக்கப்போகிறது என்று கூறினார்.