இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே இருக்கும் நிலையில் அதிமுக தலைமை அதிரடியாக ஒருசில மாவட்ட செயலாளர்களை மாற்றியுள்ளது. இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஆகியோர் கூட்டாக விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மேலும் ஒன்றுப்பட்ட தூத்துக்குடி மாவட்டச்செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் நீக்கப்பட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்டம், தூத்துக்குடி தெற்கு மாவட்டம் என இரண்டாக பிரிக்கப்பட்டு வடக்கு மாவட்டச்செயலாளராக அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களும், தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்.