சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரயில்களும் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விக்கிபீடியா ‘ஓபன் ஸ்டிரீட் மேப்’ என்ற இணையதளம் பக்கம் ஒன்றை உருவாக்கியுள்ளது. அதில், சென்னையில் எங்கு எல்லாம் வெள்ளம் இதுவரை சூழ்ந்து உள்ளது என்பதை எளிதாக பார்க்க முடியும்.
வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகள் பிங்க் நிறத்திலும், மீட்பு முகாம்கள் சிவப்பு நிற புள்ளிகளால் குறிக்கப்பட்டு உள்ளது. இது சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் உள்ள எல்லா பகுதிகளிக்கும் உதவும். மேலும் இதில் அனைத்து தகவல்களும் உடனுக்குடன் அப்டேட் செய்யப்படும். இதில் யார் வெண்டுமானாலும் தகவல்களை மாற்றலாம்.