சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ வெங்காயம் எட்டு ரூபாய்க்கு விற்பனையாகி வருவது பொதுமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தாலும் விவசாயிகள் மிகுந்த வருத்தமாக அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வெங்காயத்தின் வரத்து அதிகரித்து வந்ததை அடுத்து வெங்காயத்தின் விலை படிப்படியாக வீழ்ச்சி அடைந்து வந்தது.
கடந்த வாரம் 30 ரூபாய்க்கு விற்பனையான வெங்காயம் படிப்படியாக குறைந்து 20, 15 என விற்பனையானது. இந்த நிலையில் இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் ரூபாய் 8 முதல் 10 வரை மட்டுமே ஒரு கிலோ வெங்காயம் விற்பனை ஆகி வருவதாக வெங்காய வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.