மஹாராஷ்டிராவில் மொத்தம் 85 பேருக்கு ஒமிக்ரான் உறுதி

புதன், 29 டிசம்பர் 2021 (23:08 IST)
மஹாராஷ்டிராவில் மொத்தம் 85   பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

தென்னாப்பிரிக்காவில் இருந்து உலக நாடுகளுக்குக் கொரொனா தொற்று பரவி வருகிறது. இந்தியாவி இதுவரை 400க்கும் மேற்பட்டவர்கள் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஏற்கனவே கொரொனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் இத்தொற்றைக் குறைக்க மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு தீவிரமாகப் பணியாற்றி வருகிறது

இன்றைய நிலவரப்படி மஹாராஷ்டிராவில் மொத்தம் 85   பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் இதுவரை ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை மொத்தம் 252 ஆக அதிகரித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்