போடி அருகே மேற்கு தொடர்ச்சி மலையான குரங்கணி மலைப்பகுதியிலுள்ள ஒத்தமரம் பகுதியில் கடந்த 11 ம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் மலையேற்ற பயிற்சிக்கு சென்று திரும்பி கொண்டிருந்த சென்னை மற்றும் கோயமுத்தூர்,ஈரோட்டினை சேர்ந்த 36 பேர் சிக்கினர். சம்பவ இடத்திலே 9 பேர் பலியாகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 25 நபர்களில் 8 பேர் உயிரிழந்தனர். பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது.
இந்நிலையில் தமிழக சட்டசபையில் தீ விபத்து குறித்து நீதி விசாரணை செய்து 2 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்திட உத்தவிடப்பட்டுள்ளது. அதன்படி ஐ.ஏ.எஸ் அதிகாரி அதுல்யமிஸ்ரா சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று மாலை போடிக்கு வருகை தருகிறார். பின்னர் நாளை குரங்கணி ஒத்தமரம் பகுதிக்கு சென்று பார்வையிடப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.