முதல்வராக இருந்தபோது ஈபிஎஸ் செய்த ஜனநாயக விரோத செயல்கள்: பட்டியல் வைத்திருக்கும் ஓபிஎஸ்

செவ்வாய், 8 நவம்பர் 2022 (09:42 IST)
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது செய்த ஜனநாயக விரோத செயல்கள் அனைத்தும் பட்டியலிட்டு வைத்திருக்கிறேன் என்றும் அவை உரிய நேரத்தில் வெளியிடுவேன் என்றும் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
அதிமுக தற்போது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மற்றும் ஓ பன்னீர்செல்வம் அணி என இரண்டு அணிகளாக பிரிந்து உள்ளது என்பது தெரிந்ததே. இந்த இரண்டு அணிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சிகள் சசிகலா ஈடுபட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் ஒருவரை ஒருவர் மாறிமாறி குற்றம்சாட்டி கொண்டிருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது எங்கெல்லாம் அவர் ஜனநாயக விரோதமாக செயல்பட்டார் என்பதை பட்டியல் போட்டு வைத்துள்ளேன் என்றும் அவை உரிய நேரத்தில் வெளியிடப்படும் என்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார் 
 
மேலும் நான் உண்மையைச் சொல்ல ஆரம்பித்தால் எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் அவமானம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் துணை முதல்வர் பதவியை ஏற்க தனக்கு விருப்பமில்லை என்றும் பிரதமர் மோடி ஏற்க சொன்னதால்தான் ஒப்புக்கொண்டேன் என்று பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்