ஓமலூரில் நிர்வாண நடனம்; போலீசுக்கு மிஞ்சியது அவிழ்த்துப் போட்ட ஆடைதான்

செவ்வாய், 14 ஜூன் 2016 (15:42 IST)
சேலம் அருகே நடந்த ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகவும், அது கேள்விபட்டு போலிசார் சென்ற போது நடன அழகிகள் உட்பட பொதுமக்களும் அவர்களிடமிருந்து தப்பிய  விவகாரம் வெளியே கசிந்துள்ளது.


 

 
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள செம்மாண்டபட்டி மாரியம்மன் கோவில் கடந்த வாரம் திருவிழா நடைபெற்றது. திருவிழா முடிந்த பின், அந்த பகுதி இளைஞர்கள் ஏனாதி காலனி என்ற இடத்தில் ஆபாச நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். 
 
இரவு 10 மணிக்கு மேல் தொடங்கிய அந்த நிகழ்ச்சியில் 4 பெண்கள் மற்றும் ஒரு ஆண் நடனம் ஆடியுள்ளார்கள். நேரம் செல்ல செல்ல அந்த பெண்கள் தங்களை ஆடைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து விட்டு நடனம் ஆடியுள்ளார்கள். 12 மணிக்கு மேல் எல்லா ஆடைகளையும் கழற்றிவிட்டு நிர்வாணமாக ஆடியுள்ளார்கள்.
 
இதை அங்கிருந்த இளைஞர்கள், பெண்கள் என எல்லோரும் கண்டு ரசித்துள்ளனர். இதுபற்றி ஓமலூர் காவல் நிலையத்திற்கு சிலர் தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு நிர்வாண நடனம் ஆடியதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். 
 
போலீசாரை கண்ட நடன அழகிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆளுக்கு ஒரு பக்கம் சிதறி ஓடினர். நிர்வாணமாக ஆடிக் கொண்டிருந்த பெண்களும் தங்களின் துணியைக் கூட எடுக்காமல், அருகிலிருந்த காட்டுப்பகுதிக்குள் ஓடி தப்பிவிட்டனர்.
 
என்ன செய்வதென்று தெரியாமல், போலீசார் அங்கிருந்த பொதுமக்களின் வீடுகளில் சோதனை செய்துள்ளனர். அப்போது சில இளைஞர்கள் போலீசாரின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் போலீசார் அங்கிருந்த மைக்செட் மற்றும் நிர்வாண நடன ஆழகிகள் கழற்றிப் போட்ட ஆடைகளை பறிமுதல் செய்து காவல் நிலையத்திர்கு கொண்டு சென்றனர்.
 
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் போலீசார் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்று போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்