தமிழக உள்ளாட்சி தேர்தல்; முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளிட்ட சீமான்!
ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (09:39 IST)
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக நாம் தமிழர் கட்சி அறிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் முதற்கட்டமாக 92 வேட்பாளர்களின் பட்டியலை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ளார்.