மேலும், இந்த புயல் கரையை கடக்கும் போது 100 முதல் 120 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் இதெல்லாம் வெறும் உதார் என்பது போல ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளார்.
புயல் ஆந்திரா நோக்கி செல்வதால் சென்னை உட்பட தமிழகத்துக்கு எதிர்பார்த்த மழை கிடைக்காது என அவர் கூறியுள்ளார். மேலும், தமிழக கடல்பகுதிக்கு எந்த பாதிப்பும் இல்லை. தமிழகத்துக்கு மழை இருக்காது. சென்னை சுற்று வட்டார பகுதிகளில் லேசான மழை இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.