தமிழ் சினிமாவின் பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார். இவருக்கு தேசிய புலனாய்வு முகமை இன்று சம்மன் அனுப்பியுள்ளது.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் போடாபோடி, சண்டக்கோழி 2, சர்க்கார், தாரைதப்பட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரை பகுதியில் 300 கிலோ ஹெராயின் போதைப் பொருட்கள் மற்றும் ஏகே 47 துப்பாக்கிகள் கடத்தப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆதிலிங்கம், வரலட்சுமியின் உதவியாளராக இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இவ்வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ள குறிப்பிடத்தக்கது.