அப்போது அவரது மனைவி,சண்முக சுந்தரி அவருக்கு போன் செய்துள்ளார். செல்போனை ஆன் செய்து அவர் மனைவியுடன் பேசிக்கொண்டிருந்த போது, சூடான புரோட்டா தொண்டையில் சிக்கிக்கொண்டது. பின்னர் அவரால் குரல் எழுப்பு பேச முடியவில்லை. இதனையடுத்து சண்முக சுந்தரி பதறியடித்து, கணவர் வீட்டினருகில் உள்ள உறவினர்களை சென்று பார்க்கச் சொல்லியுள்ளார்.
அவர்கள் பூட்டிய வீட்டில் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்த போது, புருஷோத்தமன், உயிருக்கு போராடிய நிலையில் துடித்துக்கொண்டிருந்தார்.அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் போது, பாதி வழியிலேயே இறந்தார். தற்போது இந்த சம்பவம் வைரலாகிவருகிறது.