இந்த நிலையில் நடிகை நமீதா இன்று கோவையில் கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறிய போது இன்று அன்னையர் தினம், நான் முதன்முதலாக அன்னை ஆனபின் கொண்டாடும் தினம், இருப்பினும் அந்த தினத்தை கொண்டாடுவதை விட்டுவிட்டு இந்த நிகழ்ச்சிக்காக நான் வந்துள்ளேன், இனிமேல் தான் நான் சென்னை சென்று அன்னையர் தினம் கொண்டாட வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் மைசூர் சிங்கம் அண்ணாமலை தமிழகத்திற்கு வந்ததிலிருந்து தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வளர்ந்து வருகிறது என்றும் எங்கே பார்த்தாலும் பிஜேபி பிஜேபி என்று தான் மக்கள் பேசிகிறார்கள் என்றும் தெரிவித்தார். அவருடைய தலைமையின் கீழ் நிச்சயம் பாரதிய ஜனதா கட்சியை வளர்க்க என்னால் முடிந்த அளவு பாடுபடுவேன் என்றும் அவர் தெரிவித்தார்.