கொதிக்க கொதிக்க வெந்நீர்: மருமகளின் முகத்தை பதம் பார்த்த மாமியார்!

திங்கள், 20 மார்ச் 2017 (15:51 IST)
கோவையில் மாமியார் ஒருவர் மருமகளுடன் ஏற்பட்ட சண்டையில் கொதிக்க கொதிக்க வெந்நீரை எடுத்து மருமகளின் முகத்தில் ஊற்றிய சம்பவம் நடந்துள்ளது. இதனையடுத்து மாமியார் மீது இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளது.


 
 
கோவை சூலூர் அருகே உள்ள சுல்தான் பேட்டையில் ரவி என்பரும் ஆனந்தி என்பவரும் 9 வருடத்திற்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டர்னர். இவர்களுக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
 
இருந்தாலும் இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டது ரவியின் தாய்க்கு பிடிக்கவில்லை. இதனால் மருமகள் ஆனந்திக்கும் அவருக்கும் அடிக்கடி சண்டை வரும். இந்நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் மாமியார் மருமகளின் முகத்தில் அடுப்பில் கொதித்துக்கொண்டிருந்த வெந்நீரை ஊற்றியுள்ளார்.
 
இதனால் வலி தாங்க முடியாமல் ஆனந்தி சத்தம் போட அக்கம்பக்கத்தில் உள்ளோர் விரைந்து வந்து ஆனந்தியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து அவருக்கு சிகிச்சை அளித்தனர். இதனையடுத்து போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்