பரபரப்பான சூழலில் நாளை திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

திங்கள், 18 செப்டம்பர் 2017 (13:03 IST)
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மூத்த வழக்கறிஞர்களுடன் அலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் நாளை திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

 
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த தகுதி நீக்கத்தை எதிர்த்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதனிடையே, துரை முருகன், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது ஜனநாயக படுகொலை என்று குறிப்பிட்டு இருந்தார்.
 
இந்நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரம் மற்றும் திமுக சட்டப்பிரிவு வழக்கறிஞர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஏற்கனவே குட்கா வழக்கில் திமுக எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் திமுக சார்பில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில் தற்போது நாளை திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தற்போதைய அரசியல் சூழலில் அடுத்தக்கட்ட  நடவடிக்கை குறித்து அலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்