இந்த நிலையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கி வீரமணி அவர்களுக்கு பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நெருக்கடி நிலைக்கு சித்திரவதைகளில் என்னைத் தாங்கிப் பிடித்த சக சிறைவாசி என்றும் எந்த நெருக்கடியிலும் தெளிவான கொள்கை வழி காட்டும் திராவிட போராளி என்றும் தாய் கழகமான திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் ஐயாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்