கோயம்புத்தூரில் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி பொன்தாரணி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மாணவியின் பெற்றோர் அப்பள்ளி ஆசிரியர் அளித்த தொல்லையால் தன் மகள் இறந்திருப்பதாக காவல்துறையில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து போலீஸார் தனியார் பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை கைது செய்துள்ளனர்.